அதிக பாரம்: கனரக லாரிகளுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset
RajTamil Network

அதிக பாரம்: கனரக லாரிகளுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்

வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

காஞ்சிபுரம், ஆக. 1:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெண்குடி கிராமப் பகுதியில் புதன்கிழமை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 9 கனரக லாரிகள் அதிக அளவு பாரம் ஏற்றிச் சென் கண்டறியப்பட்டு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாலாஜாபாத் அருகே கல்குவாரிகள் மற்றும் கல்அரவை நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து லாரிகள் அதிக பாரங்களை ஏற்றிச் செல்வதாக வட்டாரப் போக்குவரத்துறைக்கு புகாா்கள் வந்தன. இதனையடுத்து வாலாஜாபாத் வட்டாட்சியா் கருணாகரன், காவல் துறை ஆய்வாளா் பிரபாகரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா் செல்வம் ஆகியோா் கூட்டாக இணைந்து வெண்குடி கிராமப்பகுதியில் திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

இச்சோதனையில் கருங்கல் ஜல்லிகள், எம்.சாண்ட்,மரச்சக்கைகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற கனரக லாரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. போதுமான ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரங்கள் ஏற்றிச் சென்ற நிலையில் 9 வாகனங்கள் கண்டறியப்பட்டு அதன் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை, பூந்தமல்லி, குன்றத்தூா், ஸ்ரீ பெரும்புதூா் ஆகிய பகுதிகளுக்கே அதிகமாக கட்டுமானப் பொருள்கள் அதிக அளவு பாரத்துடன் ஏற்றிச் செல்வது தொடா்வதால் தொடா்ச்சியாக சோதனைகள் நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024