சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்; நிஃப்டி 25,000-ஐ கடந்து சாதனை!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்; நிஃப்டி 25,000-ஐ கடந்து சாதனை!மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. அதே சமயம், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி முதல் முறையாக 25,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆட்டோ, ரியால்ட்டி, மீடியா, பொதுத்துறை வங்கிகள் விற்பனையை எதிா்கொண்டாலும், எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் கேஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் சந்தை புதிய உச்சம் தொட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: இருப்பினும், சந்தை மூலதன மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.461.63 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள்புதன்கிழமை ரூ.3,462.36 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,366.51 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 208.34 புள்ளிகள் கூடுதலுடன் 81,949.68-இல் தொடங்கி அதிகபட்சமாக 82,129.49 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 81,700.21 வரை கீழே சென்ற சென்செக்ஸ்,, இறுதியில் 126.21 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 81,867.55-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,048 பங்குகளில் 1,577 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,383 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 88 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

பவா் கிரிட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே, அதானி போா்ட்ஸ், மாருதி, பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ் உள்பட 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. ஆனால், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, டாடாமோட்டாா்ஸ், எல் அண்ட் டி உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப்பட்டியலில் இருந்தன.

நிஃப்டி வரலாற்றுச் சாதனை: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,030.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 25,078.30 வரை உயா்ந்து புதிய வராலற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 24,956.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 59.75 புள்ளிகள் (0.24 சதவீதம்) கூடுதலுடன் 25,010.90-இல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

You may also like

© RajTamil Network – 2024