31 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் – வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

31 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் – பெண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – ஏன் தெரியுமா?31 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் - பெண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் - ஏன் தெரியுமா?

மும்பை உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 1987 முதல் 2017 வரை தொடர்ந்து 31 ஆண்டுகளாக தன்னை ஒருவர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குறிப்பாக கல்யாண், பிவாண்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று பல்வேறு ஓட்டல்களில் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1996ஆம் ஆண்டில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், நிறுவனப் பொறுப்பை தான் கவனித்து வந்ததாகவும், 2017 செப்டம்பரில் தனது தாயின் அறுவைச் சிகிச்சைக்காக விடுமுறை எடுத்துச் சென்று விட்டு, திரும்பி வந்தபோது அலுவலகம் மூடப்பட்டிருந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். முதியவரை தொடர்பு கொண்ட கேட்டபோது அவர் திருமணம் செய்ய மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரம், வருமான வரி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை தர மறுத்ததாகவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.கட்காரி மற்றும் நீலா கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் கருத்தொற்றுமையுடன் உறவில் ஈடுபட்டது தெளிவாக தெரிவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், 31 ஆண்டுகளாக பாலியல் உறவில் ஈடுபட்டுவிட்டு, தாமதமான புகார் குறித்து எந்த விளக்கமும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை – நிதின் கட்கரி உறுதி

விளம்பரம்

இருவருக்கும் இடையிலான உறவு கசந்ததும், பாலியல் பலாத்காரம் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து புகார்தாரர் எதையும் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளனர். 2வது திருமணத்திற்கு சட்டம் அனுமதிக்காது என்று தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அந்த பெண் முதிர்ச்சி அடைந்தவர். மேலும், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்கிறேன் என முதியவர் வாக்குறுதி அளித்துள்ளார் என்ற குற்றச்ச்சாட்டுகளே புகாரில் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

கடந்த 31 ஆண்டுகளில் முதியவர் உடனான தொடர்பை துண்டித்துவிட்டு, அவருக்கு எதிராக புகார் அளிக்க அந்த பெண்ணுக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும், அவ்வாறு செய்யவில்லை என்று கூறி, அந்த பெண்ணின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Court Case
,
Crime News
,
rape
,
rape case

You may also like

© RajTamil Network – 2024