Saturday, September 21, 2024

முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்திருப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. விளக்கம்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

இந்தியா – இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

கொழும்பு,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

அதில் இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணியினர் தங்களுடைய கையில் கருப்பு பட்டையை அணிந்து களமிறங்கினர். இதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த புதன்கிழமை காலமான இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அவுன்ஷுமான் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளது.

Team India is wearing black armbands today in memory of former Indian cricketer and coach Aunshuman Gaekwad, who passed away on Wednesday.

— BCCI (@BCCI) August 2, 2024

You may also like

© RajTamil Network – 2024