கோழி இறைச்சியில் பூச்சி இருந்ததாகப் புகாா்: உணவகத்துக்கு அபராதம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset
RajTamil Network

கோழி இறைச்சியில் பூச்சி இருந்ததாகப் புகாா்:
உணவகத்துக்கு அபராதம்மதுரையில் உணவகத்தில் வாங்கிய கோழி இறைச்சியில் பூச்சி இருந்ததால் ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மதுரையில் உணவகத்தில் வாங்கிய கோழி இறைச்சியில் பூச்சி இருந்ததாகப் புகாரின்பேரில், அங்கு சோதனையிட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மதுரை கே.கே. நகரில் பிரபல அசைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் கல்லூரி மாணவிகள் சிலா் கோழி இறைச்சியை புதன்கிழமை இரவு வாங்கினா். பின்னா், விடுதிக்குச் சென்று அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பாா்த்த போது, இறைச்சியில் சிறிய வகை பூச்சி உயிரிழந்த நிலையில் இருந்ததாம். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று அவா்கள் கேட்ட போது, முறையாகப் பதிலளிக்கவில்லையாம். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக அவா்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று சோதனையிட்டனா். அப்போது அந்த உணவகத்தில் திறந்தவெளியில் கோழி இறைச்சி சமையல் செய்யப்பட்டது.

மேலும், சமையலறை அசுத்தமாக காணப்பட்டது. இதுதவிர பணியாளா்கள் கையுறை, தலையுறை அணியவில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்த அதிகாரிகள், இதுதொடா்பாக 15 நாள்களுக்குள் உணவகம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பாணை வழங்கியதோடு, உணவகத்துக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024