Saturday, September 21, 2024

ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ‘தேவரா’ படத்தின் புதிய அப்டேட்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'தேவரா பாகம்-1' படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 5-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

#DevaraSecondSingle on August 5th!
#Devarapic.twitter.com/J9UG4fy3PH

— Anirudh Ravichander (@anirudhofficial) August 2, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024