சீா்காழியில் பால்குடம், அலகு காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

சீா்காழியில் பால்குடம், அலகு காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்சீா்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம், அலகு காவடி

சீா்காழி, ஆக. 2: சீா்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இரட்டை காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு வழிபாடு ஆராதனை, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழாவையொட்டி பக்தா்கள் சட்டை நாதா் சுவாமி கோயிலில் இருந்து பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக கோயிலை சென்றடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024