நிலச்சரிவில் 2 உயிரை காப்பாற்றிய யானைகள்.. என்ன நடந்தது?

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

நிலச்சரிவில் 2 உயிரை காப்பாற்றிய யானைகள்… என்ன நடந்தது? வயநாட்டில் நெகிழ்ச்சி!வயநாட்டில் நெகிழ்ச்சி

வயநாட்டில் நெகிழ்ச்சி

நிலச்சரிவின்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள சென்ற பாட்டிக்கும் பேத்திக்கும் பாதுகாப்பாக 3 யானைகள் நின்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சூரல்மலையைச் சேர்ந்த சுஜாதாவும் அவரின் பேத்தி மிருதுளாவும் கடந்த 30 ஆம் தேதி வழக்கம் போல தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அன்றிரவு பலத்த மழை காரணமாக தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. தண்ணீர் புகுந்ததால் காப்பாற்றும்படி தனது பேத்தி அழுகுரல் கேட்டதும், பேத்தியை கையில் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சில நொடிகளில் சுஜாதாவின் வீடு இடிந்து தரைமட்டமானது.

விளம்பரம்

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சென்ற போது அந்த குடியிருப்பும் இடிந்து விழுந்துள்ளது. திரும்பும் திசையெல்லாம் மழையும், சகதியும், மரக்கிளைகளுமாக இருந்த அந்த இரவில் எங்கே கால்வைக்கிறோம் என தெரியாமல் இருவரும் நடந்து மேடான பகுதி நோக்கி சென்றனர். சூரல்மலையில் இருந்து உயரமான பகுதியை நோக்கி சுஜாதவும் அவரின் பேத்தி மிருதுளாவும் நடந்து சென்று காப்பி தோட்டம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.

சில நிமிடங்களில் தாங்கள் நடந்து வந்த பகுதிகளில் வெள்ளமும் சகதியும் பெருக்கெடுத்தது. தொடர்ந்து முன்னேறிய சுஜாதாவும் அவரின் பேத்திக்கும் காத்திருந்தது அதிர்ச்சி. தங்களுக்கு மிக அருகிலேயே 3 யானைகள் நின்றிருந்தன, அதனைக் கண்டு அதிர்ந்த சுஜாதா, பனை மரம் ஒன்றின் கீழ் தனது பேத்தியை பிடித்தபடி யானைகள் முன் மண்டியிட்டுள்ளார். ஏற்கனவே தாங்கள் பெரிய துயரத்தை சந்தித்துள்ளதாகவும், தங்களை தாக்க வேண்டாம் என யானைகளிடம் கெஞ்சியதாக பாட்டி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

தனது உணர்வுகளை புரிந்து கொண்ட யானைகள் கண்ணீருடன் காதை அசைத்தபடி நின்றிருந்ததாக பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சுற்றிலும் இருள் சூழ்ந்த பகுதியில் உதவி கேட்டு யானையிடம் மன்றாடிய பாட்டியும், பேத்தியையும் யானைக்கூட்டம் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக நின்றன. காலை 6 மணிக்கு வெளிச்சம் வரும் வரையில் அரணாக நின்ற யானைக்கூட்டம், மீட்புப் பணியினர் வந்ததும் அங்கிருந்து விலகிச்சென்றுவிட்டது.

நிலச்சரிவில் சிக்கி தப்பி வந்தபோது காயமடைந்த பாட்டி சுஜாதாவும் தனது பேத்தியும் தற்போது மேப்பாடியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Wayanad
,
Wayanad Landslide 2024

You may also like

© RajTamil Network – 2024