வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு…காரணம் என்ன?

by rajtamil
0 comment 50 views
A+A-
Reset

பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சென்னை,

வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் அறிமுகமாகிறார்கள். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது படத்தின் பெயர், 'ரயில்' என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வணக்கம். எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் 'வடக்கன்' திரைப்படத்தின் பெயர், தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது 'ரயில்' என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வரும் 24ம் தேதி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024