வயநாடு நிலச்சரிவில் புதைந்தவர்களை இப்படி கண்டுபிடிக்க முடியுமா?

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவில் புதைந்தவர்களை விண்வெளி தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? – இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்!வயநாடு நிலச்சரிவில் புதைந்தவர்களை விண்வெளி தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? - இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்!

கேரள மாநிலம், வயநாட்டில், நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் புதையுண்டவர்களை விண்வெளி தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடியுமா என்பது இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதில் அளித்தார். அப்போது, வயநாடு நிலச்சரிவில் மண்ணிற்குள் புதைந்தவர்களை விண்வெளி தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடியாதா? என்று சோம்நாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், விண்வெளி சார்ந்து இயங்கும் சென்சார்களால், பூமிக்குள் புதையுண்ட பொருட்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறினார். அதேபோல் மண்ணிற்குள் ஆழமாக புதைந்த பொருட்களை, விண்வெளியில் இருந்து கண்டுபிடிப்பது முடியாத காரியம் என்று கூறிய அவர்,

விளம்பரம்
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!
மேலும் செய்திகள்…

ரேடார் சிக்னல் மூலம் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பூமிக்குள் இருப்பதை ஆராய முடியும் என்று தெரிவித்தார். குறிப்பாக, பூமிக்குள் ஆழமாக புதைந்த பொருட்கள், பெட்ரோலியம், தனிமங்கள் உள்ளிட்டவற்றை விண்வெளியில் இருந்து கண்டுபிடிக்க முடியாது என்று அவர் விளக்கம் அளித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ISRO
,
Wayanad
,
Wayanad Landslide 2024

You may also like

© RajTamil Network – 2024