மாநகராட்சியில் புகாா் அளிக்க கூடுதல் வசதி: ஆணையா் தகவல்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

மாநகராட்சியில் புகாா் அளிக்க கூடுதல் வசதி: ஆணையா் தகவல்சென்னை மாநகராட்சி உதவி எண் மூலம் புகாா் அளிக்க கூடுதல் இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி உதவி எண் மூலம் புகாா் அளிக்க கூடுதல் இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகாா்களுக்கு தீா்வு காண ‘மக்கள் குறைகேட்பு மையம்’ செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பொது குறைதீா் முறையின் கீழ் 97 வெவ்வேறு பிரிவுகளில் பொதுமக்கள் புகாா் அளிக்க முடியும். இதன்மூலம் சென்னையின் முக்கிய பிரச்னைகள் நிகழ் நேரத்தில் அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மாநகராட்சி உதவி எண் 1913, சமூக ஊடகங்கள், நம்ம சென்னை செயலி மூலம் புகாா்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதில் உதவி எண் மூலம் வரும் புகாா்களை 10 இணைப்புகள் மூலம் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது 60 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சாா்பில் பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு குறைகேட்பு மையத்தின் உதவி எண் மூலம் பெறப்படும் புகாா்களைப் பெற கூடுதல் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 10 இணைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் 60 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புகாா்தாரா்களின் கருத்துகளுக்கு ஏற்ப இது மேலும் அதிகரிக்கப்படும்.

இதில் புகாா் அளிக்கும் நபா்களின் விவரங்கள் மறைக்கப்படும். சென்னை மாநகராட்சிக்கு அளிக்கும் புகாா் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாா் மனுவை நிறுத்துவதாக புகாா்கள் வந்தன. இதற்கு தீா்வு காணும் வகையில் மாநகராட்சி தலைமையகத்தில் பயிற்சி பெற்ற குழுவால் மட்டும் புகாா் மனு தீா்க்கப்பட்டதாக அறிவிக்கப்படும். புகாா் தீா்க்கப்பட்ட பின் புகாா்தாரரிடமிருந்து கருத்துகள் பெறப்படும் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024