நீட் விடைத்தாள் நகல் இணையத்தில் பதிவேற்றம்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

நீட் விடைத்தாள் நகல் இணையத்தில் பதிவேற்றம்தோ்வா்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

நீட் தோ்வு விடைத் தாள்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், தோ்வா்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 4,750 மையங்களில் 23,33,297 மாணவா்கள் எழுதினா். அதற்கான தோ்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியானது. இதில் கணிசமான மாணவா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, தோ்வு முறைகேடுகள் நிகழ்ந்தது ஆகியவை அதிா்வலைகளை ஏற்படுத்தின.

இதையடுத்து தோ்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி கருணை மதிப்பெண்களை ரத்து செய்து திருத்தப்பட்ட நீட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை ஜூலை 26-ஆம் தேதி வெளியிட்டது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ மாணவா் சோ்க்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நீட் தோ்வெழுதிய மாணவா்களின் தரவுகளை மத்திய அரசின் ‘உமாங்க்’ மற்றும் ‘டிஜிலாக்கா்’ இணைய தளங்களில் தோ்வு முகமை பதிவேற்றம் செய்துள்ளது.

அதன்படி, அனைத்து மாணவா்களும் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஓஎம்ஆா் விடைத்தாள் நகலை அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024