என் குடும்பம் எங்க இருக்கு.. நெஞ்சை உலுக்கும் வீடியோ

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

என் குடும்பம் எங்க இருக்கு.. வயநாட்டில் சொந்தங்களை தேடும் முதியவர் – நெஞ்சை உலுக்கும் வீடியோகுடும்பத்தை தேடும் முதியவர்

குடும்பத்தை தேடும் முதியவர்

வயநாட்டில் ஜூலை 29 நள்ளிரவில் பெய்த அதிகனமழை மற்றும் நிலச்சரிவால் பூஞ்சேரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை கிராமங்கள் சிதைத்துவிட்டன. இதனால், குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் என ஒவ்வொருவரும், தங்களது உறவுகள் எங்காவது ஒரு மூலையில் தப்பிப் பிழைத்திருக்க மாட்டார்களா என ஒரு வாரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி, உறவுகளை தொலைத்துவிட்டு உருக்குலைந்த கிராமத்திற்குள், கண்ணீருடன் உலவுகிறார் முதியவர் ஒருவர். முண்டக்கை கிராமத்தில் மனைவி, மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த முதியவர் கருப்பையா, தற்போது அனைத்து உறவுகளையும் தொலைத்துவிட்டு, அவர்கள் கிடைப்பார்களா என ஏக்கத்துடன் தேடி வருகிறார்.

விளம்பரம்

முகாம்களில் அங்குலம் அங்குலமாக அலசியும் அவர்களைக் காண முடியாததால், மண்மேடுபோல மாறிப் போன தனது கிராமத்தில் எங்காவது கிடைப்பார்களா என தள்ளாத வயதிலும் தளராமல் தேடிக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால், கடைசியாக ஒருமுறை உடலை மட்டுமாவது பார்த்துவிட வேண்டும் என கண்களில் உறக்கமின்றி, பொக்லைன் இயந்திரங்கள் பூமியைக் கிளறுவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த 71 வயது முதியவர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், காணும் இடமெல்லாம் இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் நிறைந்திருக்கும் நிலையில், சற்று ஆறுதலான நிகழ்வுகளும் நம்பிக்கையை மீட்டெடுக்கின்றன.

ஆறு நாள் தேடுதலுக்கு பிறகு, தான் தூக்கி வளர்த்த செல்லப்பிராணியை கண்டுபிடித்த பெண்மணி, அதனை கட்டியணைத்து, கொஞ்சி, அன்பைப் பொழிந்தார். தன்னை வளர்த்தவரை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் அந்த நாய் பாசத்துடன் விளையாடி மகிழ்ந்தது. எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்பதைப் போல, 6 நாட்களாக தவித்த இதங்கள் சங்கமித்த இந்த நிகழ்வு, பேரழிவில் இருந்து மீளும் நம்பிக்கை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Wayanad
,
Wayanad Landslide 2024

You may also like

© RajTamil Network – 2024