14
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி நினைவுநாளையொட்டி, வரும் 7-ந்தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை கட்டிடம் உள்பட 46 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 30 கோடி ரூபாயில் இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய மருத்துவ உபகரணங்கள் ராஜீவ்காந்தி, கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைகளுக்கு ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.