அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை – ஹிமந்தா பிஸ்வா சர்மா

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கவுகாத்தி,

அசாமில் அம்மாநில அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அங்கே அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று, இன்று நடைபெற்ற மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மியா என்று அழைக்கப்படும் வங்காள மொழி பேசும் வங்காள தேச முஸ்லீம்களைப் பழங்குடியினராக அங்கீகரிக்கவும் அவர் சில நிபந்தனைகளை விதிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் என்றும் அசாமின் பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்றும் பா.ஜனதா ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் அசாமில் லவ் ஜிஹாத் வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை அசாம் அரசு விரைவில் கொண்டு வரும் என்றும் சர்மா கூறினார். தொடர்ந்து, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் அசாம் அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024