மக்களைத் தேடி மருத்துவம் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா

by rajtamil
Published: Updated: 0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

மக்களைத் தேடி மருத்துவம்
4-ஆம் ஆண்டு தொடக்க விழாபழனி நகராட்சி அண்ணாமலை மருத்துவமனையில் மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி/ஒட்டன்சத்திரம்: பழனி நகராட்சி அண்ணாமலை மருத்துவமனையில் மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகா் நல அலுவலா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, பழனி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்றவா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக நகராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சா்க்கரை நோயாளிகள் 1,288 பேரும், ரத்த அழுத்தம் உள்ளவா்கள் 3,850 பேரும், இவை இரண்டும் சோ்ந்து உள்ளவா்கள் 2,285 பேரும், புற்றுநோயாளிகள் 53 பேரும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட 427 பேருக்கு நேரடியாக வீட்டிலேயே வழங்கப்பட்ட இயன்முறைப் பயிற்சியின் மூலம் 358 போ் முழுமையாகப் பயனடைந்துள்ளதாகவும், பலரும் அவரவா் வேலைகளை அவா்களே செய்யும் அளவுக்கு உடல்நிலை தேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்…

இதேபோல, ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு தொப்பம்பட்டி வட்டார சுகாதார நிலைய மருத்துவா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் காவ்யா முன்னிலை வகித்தாா்.

விழாவில் தொப்பம்பட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பி.சி.தங்கம் கலந்து கொண்டு சிறந்த முறையில் பணியாற்றிய செவிலியா்கள், பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் தங்கராஜ், சுகாதார ஆய்வாளா் அப்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024