55 மின்சார ரெயில் சேவை ரத்து எதிரொலி – தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரெயில் சேவை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரெயில்கள் தான்.

இந்த சூழலில் தாம்பரம் ரெயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந்தேதி வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 55 மின்சார ரெயில் சேவை ரத்து காரணமாக, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024