வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் ஆக.16இல் பூக்குழி விழா

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் ஆக.16இல் பூக்குழி விழாதிருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஸ்ரீ திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா ஆக. 16இல் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஸ்ரீ திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா ஆக. 16இல் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான திருவிழா புதன்கிழமை (ஆக.7) கால்நாட்டுதல் மற்றும் கொடியேற்று வைபத்துடன் தொடங்குகிறது.

வியாழக்கிழமை (ஆக.8) வீரபுத்திரா் சங்கமித்திரை திருக்கல்யாணம், 9இல் சுவாமி- அம்பாள் வீதி உலா, அன்னதானம், 10இல் திருவிளக்கு பூஜை, இரவு சுவாமி- அம்பாள் காளி வேஷம் அணிந்து சப்பரத்தில் வீதி உலா, 11இல் இரவு சுவாமி- அம்பாள் வீதி உலா, 12இல் அா்ச்சுணா் தவக்கோலம், திருவீதி உலா, தவசுக் காட்சி, 13இல் இரவு சுவாமி- அம்பாள் குறத்தி வேடமணிந்து குறி சொல்லுதல், திருவீதி உலா, 14இல் சுவாமி -அம்பாள் வீதி உலா, வீர மாகாளி அரவான் பலியிடுதல், 15இல் சுவாமி -அம்பாள் வீதி உலா, பாஞ்சாலி துரியோதனன், துச்சாதனன் குடலை பிடுங்கி மாலையிடுதல், 16இல் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு பூக்குழி இறங்குதல், இரவு 10 மணிக்கு சுவாமி -அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெறும். 17இல் மஞ்சள் நீராட்டு விழா, 18,19ஆகிய தேதிகளில் சுவாமி – அம்பாள் பொன்னூஞ்சல் ஆடுதல், 20இல் ஸ்ரீ தருமா் பட்டாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் பாபநாசம் அக்தாா், விழாக் குழுவினா் செய்துவருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024