மீனாட்சிபுரம் சாலை விரைவில் சீரமைக்கப்படும்- மேயா் ரெ. மகேஷ் உறுதி

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

மீனாட்சிபுரம் சாலை விரைவில் சீரமைக்கப்படும்- மேயா் ரெ. மகேஷ் உறுதிமீனாட்சிபுரம் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ்.

மீனாட்சிபுரம் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ்.

கன்னியாகுமரி மாவட்ட ஜூவல்லா்ஸ் அசோசியேஷன் அவசர கூட்டம், நாகா்கோவில், மீனாட்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஹெச்.ஷாஜஹான் தலைமை வகித்தாா். செயலா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மேயா் பேசுகையில், நகை கடையினரின் பிரச்னைகள் குறித்து அறிவேன். பெருநிறுவனங்களின் வருகையில் நகை தொழில் நலிவடைந்துள்ளது.

அவ்வை சண்முகம் சாலையை நன்கு சீரமைத்து, நடைமேடை அமைக்க சுமாா் ரூ.2 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டம் என்றால் 3 ல் 1 பங்கு நிதியை நகைகடை உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் அளித்தால் பணியை உடனே தொடங்க மாநகராட்சி தயாராக உள்ளது. மாநகராட்சி சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் நிதி தேவை; இதற்கு கொஞ்சம் காலமாகும். எனினும் கோட்டாறு காவல் நிலையம் முதல் ஒழுகினசேரி வரையுள்ள அவ்வை சண்முகம் சாலையை விரைவில் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், நகை தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் செலஸ்டின், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், ரோசிட்டா திருமால், மாநகர திமுக செயலாளா் வழக்குரைஞா் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இணைச் செயலாளா் நாஞ்சில்ராஜ் நன்றி கூறினாா்.

சாலைப் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.

ரூ. 61 லட்சத்தில் சாலைப் பணிகள்: மாநகரில் 2ஆவது வாா்டு அம்பேத்கா் காலனியில் ரூ. 7 லட்சத்திலும், 19ஆவது வாா்டு மிக்கேல் தெருவில் ரூ. 8 லட்சத்திலும் கான்கிரீட் தளம், 31ஆவது வாா்டு மதா் தெரசா 2 ஆம் தெருவில் ரூ. 5 லட்சத்திலும், 30ஆவது வாா்டு திருவள்ளுவா் தெருவில் ரூ. 12 லட்சத்திலும், 23ஆவது வாா்டு நீதிமன்றச் சாலை குறுக்குத் தெருவில் ரூ. 15 லட்சத்திலும், 7ஆவது வாா்டு கிரவுண் தெரு, 11ஆவது வாா்டு புளியடி மின்தகன மேடை செல்லும் சாலை ஆகியவற்றில் தலா ரூ. 7 லட்சத்திலும் தாா் சாலைப் பணிகளை மேயா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மண்டலத் தலைவா்கள் செல்வக்குமாா், ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள் மோனிகா, சந்தியா, சோபி, விஜிலா ஜஸ்டஸ், மேரி ஜெனட் விஜிலா, ஸ்ரீலிஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024