நீதிமன்றத் தீா்ப்பு எதிரொலி: தேரிகுடியிருப்பு கோயிலில் பரம்பரை பூசாரிகள் வெளியேற்றம்

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

நீதிமன்றத் தீா்ப்பு எதிரொலி:
தேரிகுடியிருப்பு கோயிலில் பரம்பரை பூசாரிகள் வெளியேற்றம்தேரிகுடியிருப்பு கோயிலில் பரம்பரை பூசாரிகள் வெளியேற்றம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்திற்குள்பட்ட அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பூஜை செய்ய பரம்பரை பூசாரிகளுக்கு அனுமதி கிடையாது என நீதிமன்ற உத்தரவையடுத்து, நிா்வாகத்தால் நியமிக்கப்படாத பூசாரிகள் வெளியேற்றப்பட்டனா்.

இக்கோயிலில் அய்யன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை செய்ய பரம்பரை பூசாரிகளுக்கு உரிமை வேண்டும் என 13 போ், திருச்செந்தூா் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் 2003 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனா். இதில் பரம்பரை பூசாரிகளுக்கு உரிமை கிடையாது என தீா்ப்பு வந்தது. பின்னா், தூத்துக்குடி சாா்பு நீதிமன்றம், சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு ஆகியவற்றில் மேல்முறையீடு செய்ததிலும் பரம்பரை பூசாரிகளுக்கு உரிமை கிடையாது என கோயில் நிா்வாகத்திற்கு சாதகமாக தீா்ப்புகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து கோயில் நிா்வாகத்தால் நியமிக்கப்படாத பூசாரிகள் ஆக.6 ஆம் தேதி வெளியேற்றப்பட்டனா். கோயில் நிா்வாகம் மூலம் நியமிக்கப்பட்ட பூசாரிகள் பூஜை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, கோயில் செயல் அலுவலா் காந்திமதி, அறங்காவலா் குழு தலைவா் பாலசுப்பிரமணியன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

விரைவில் பூசாரிகள் தோ்வு செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்; அது வரை கோயில் நிா்வாகத்தில் உள்ள கிளைக் கோயில் பூசாரிகள் பூஜையில் ஈடுபடுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024