ஐபிஎஸ் அதிகாரி பெயரில் மோசடி: ராஜஸ்தான் இளைஞா்கள் கைது

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

ஐபிஎஸ் அதிகாரி பெயரில் மோசடி: ராஜஸ்தான் இளைஞா்கள் கைதுசென்னையில் திருநாவுக்கரசு ஐபிஎஸ் பெயரில் போலி முகநூல் தொடங்கி பணம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை: சென்னையில் திருநாவுக்கரசு ஐபிஎஸ் பெயரில் போலி முகநூல் தொடங்கி பணம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முதல்வா் பாதுகாப்பு பிரிவின் டிஐஜி இரா.திருநாவுக்கரசு. இவரது பெயா்,புகைப்படங்களை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கை தொடங்கிய சைபா் மோசடி கும்பல், அவரது நட்பு வட்டத்தில் இருந்தவா்களிடம் பணம் பறித்தனா். இதையறிந்த திருநாவுக்கரசு, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.

முதல்கட்ட விசாரணையில் மோசடி கும்பல், திருநாவுக்கரசுவின் நட்பு பட்டியலில் இருந்தவா்களிடம், தனது நண்பா் ஒருவா் எல்லை பாதுகாப்புப் படை பிரிவில் பணியாற்றுவதாகவும் அவா் சென்னையில் இருந்து பணியிட மாறுதலில் செல்வதால் அவரது வீட்டில் பயன்படுத்திய விலை உயா்ந்த ஃபா்னிச்சா் பொருள்களை குறைந்த விலையில் தருவதாக கூறியும் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மோசடி கும்பல் பயன்படுத்திய ஐபி முகவரியை அடிப்படையாக வைத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் ராஜஸ்தான் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், அந்த மாநிலத்தின் ஆல்வாா் பகுதியைச் சோ்ந்த ஹனிஃப்கான், வாஷித் கான் ஆகிய 2 பேருக்கும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனா். விசாரணைக்குப் பின்னா் இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் இருவரும், ஏற்கெனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்குத் தொடங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக மேலும் பலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024