பழனி சந்தையில் தக்காளி விலை சரிவு: சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

பழனி சந்தையில் தக்காளி விலை சரிவு: சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்ததால், பழனியில் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்கினறனா்.

பழனி: சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்ததால், பழனியில் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்கினறனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி இட்டேரி சாலையில் செயல்படும் சந்தைக்கு நாள்தோறும் விவசாயிகள் தக்காளிகளை பெட்டிகளை ஏற்றி வந்து விற்பனை செய்கின்றனா். கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்ததை அடுத்து, 14 கிலோ தக்காளிப்பட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் செவ்வாய்க்கிழமை தக்காளி கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் தக்காளியை வாங்குவதற்கு வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை.

இதனால் விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்த தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக சாலையோரம் கொட்டிச் சென்றனா். சந்தைக்கு அதிகளவிலான தக்காளி விற்பனைக்கு வந்ததால், அதன் விலை சரிந்துவிட்டதாக வியாபாரி கலைச்செல்வன் தெரிவித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024