ரூ.70,000க்கு முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை..

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ரூ.70,000க்கு முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை புகார்… அடுத்து வெடித்த சர்ச்சை!நீட் தேர்வு

நீட் தேர்வு

இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், முதுநிலை நீட் தேர்விலும் சர்ச்சை வெடித்துள்ளது.

இளநிலை நீட் தேர்வு சர்ச்சைக்கு மத்தியில் ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.

முதுநிலை நீட்தேர்வு நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ‘NEET PG Leaked Materials என்ற பெயரில் டெலிகிராம் சேனல் ஒன்று செயல்படுவதாகவும், அதில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விளம்பரம்

70 ஆயிரம் ரூபாய் வரை இந்த வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பல தடைகளை உடைத்து ஒலிம்பிக்கில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வினேஷ் போகத்.. யார் இந்த சிங்கப்பெண்?

டெலிகிராம் செயலியில் இதுபோல் நூற்றுக்கணக்கான சேனல்களில், நீட் வினாத்தாள் வழங்கப்படும் என்ற தகவல்கள் பகிரப்படுவது, முறையாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Neet Exam
,
NEET Result

You may also like

© RajTamil Network – 2024