Saturday, September 21, 2024

இந்தியாவில் அதிக வசூல்- தோர்: லவ் அண்ட் தண்டரை முந்திய டெட்பூல் & வோல்வரின்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

'டெட்பூல் & வோல்வரின்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துள்ளது.

சென்னை,

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதன்படி தற்போது மார்வெலின், 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவாகியுள்ளது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த மாதம் 26-ந் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளியுள்ளது. அதன்படி, இப்படம் இந்த வார இறுதியில் ரூ.107 கோடி வசூலித்துள்ளது.

இந்தநிலையில், 'டெட்பூல் & வோல்வரின்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துள்ளது.அதன்படி, இந்தியாவில் அதிகம் வசூலித்த மார்வெல் படங்களின் டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது. இதற்கு முன்னதாக 5-வது இடத்தில் இருந்த தோர்: லவ் அண்ட் தண்டரை முந்தி 'டெட்பூல் & வோல்வரின்' இந்த சாதனையை படைத்துள்ளது.

1. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – ரூ.373.22 கோடி

2. அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் – ரூ.222.69 கோடி

3. ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் – ரூ.212 கோடி

4. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் -ரூ126.94 கோடி

5. டெட்பூல் & வோல்வரின் -ரூ.107.80 கோடி

Original Article

You may also like

© RajTamil Network – 2024