ஆடிப்பூரம்: கமல வாகனத்தில் மீனாட்சி அம்மன் பவனி

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

பெண்கள் தாங்கள் கொண்டு வந்த வளையல், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் ஆகியவற்றை அம்மனுக்கு வழங்கி ஆசி பெற்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தினமும் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளிக்கிறார்கள்.

விழாவின் 3-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தன்று மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் காலை 9 மணிக்கு திரை போட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதன்பின்னர் அம்மனுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் தாங்கள் கொண்டு வந்த வளையல், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் ஆகியவற்றை அம்மனுக்கு வழங்கி ஆசி பெற்றனர்.

அதன்பின்னர் மீனாட்சி அம்மன் கமல வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024