ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 5-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

துபாய்,

இலங்கை – இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த 2, 3 மற்றும் 4-ம் இடங்களில் முறையே இந்தியாவின் சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளனர்.

The fight for the pole position is on! India's top three are in for a close contest in the ICC Men's ODI Player Rankings : https://t.co/pxvVKgQN6Lpic.twitter.com/YgBOPDH8ID

— ICC (@ICC) August 7, 2024

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி, முகமது சிராஜுடன் 4-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். மற்றொரு இந்திய வீரரான பும்ரா 8-வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றமுமில்லை.

The battle for the top spot is on Three India stars are within sight of Babar Azam in the ICC Men's ODI Batters Rankings https://t.co/vdeiut4moG

— ICC (@ICC) August 7, 2024

You may also like

© RajTamil Network – 2024