இன்று நாக சதுர்த்தி.. கஷ்டங்கள் தீர கணபதியை வழிபடுங்கள்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

வாழ்வில் ஏற்படும் தடைகள் விலகுவதற்கு இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம்.

ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று நாக சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக வழிபடக் கூடியவை என்பதால், நாக சதுர்த்தி நாளில்

நாக தேவதைகளை வழிபடுவது நல்லது. நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவதால் நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. புற்றுக்கு பால் ஊற்றியும் வழிபடுவது வழக்கம்.

திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம். அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம்.

அத்துடன், இன்றைய தினம் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் என்றாலும், சதுர்த்தி நாளாக இருப்பதால் விநாயகரையும் வழிபடவேண்டும். சங்கடம் அனைத்தையும் நீக்கி சவுபாக்கியம் தரவல்லது சதுர்த்தி விரதம். கணபதிக்கு மோதகம் படைத்து வழிபட கஷ்டம் யாவும் தீரும்.

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை வழிபட்டால், சர்ப்ப தோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024