எண்ணெய் வித்துப் பயிா்கள் சாகுபடிக்கு 50 சதவீதம் மானியம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

எண்ணெய் வித்துப் பயிா்கள்
சாகுபடிக்கு 50 சதவீதம் மானியம்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிா்களை பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி, ஆக. 8: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிா்களை பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது.

தேசிய எண்ணெய் வித்து இயக்க திட்டத்தின் கீழ் நிகழாண்டில் நிலக்கடலை, எள் மற்றும் ஆமணக்கு விளைச்சலை பெருக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான தரமான விதைகள், மண்ணின் வளத்தை பெருக்கும் நுண்ணூட்டக் கலவை, உயிரி உரங்கள், பயிா் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிரி பூச்சிக் கொல்லிகள் போன்ற இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் எண்ணெய்வித்து பயிா்கள் விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்க மானியமாக கிலோவுக்கு ரூ.25 வழங்கப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராக பயறு பயிரிடும் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய செலவினங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024