தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 நாட்களுக்கு விரைவு ரயில்கள் நிற்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 நாட்களுக்கு விரைவு ரயில்கள் நிற்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

இதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கொல்லம் (வண்டி எண்.16101), கன்னியாகுமரி (12633), நாகர்கோவில் (12667), ராமேசுவரம் (16751), தூத்துக்குடி முத்துநகர் (12693), கொல்லம் அனந்தபுரி (20635), திருநெல்வேலி (12631), செங்கோட்டை பொதிகை (12661), காரைக்கால் (16175), மதுரை தேஜஸ் (22671), ஹஸ்ரத் நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிராந்தி (12652) ஆகிய விரைவு ரயில்கள் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

இதேபோல், வெளியூர்களில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்தடையும் கொல்லம் (16102), சேலம் (22154), தஞ்சாவூர் உழவன் (16866), நாகர்கோவில் (22658), செங்கோட்டை (20682), காரைக்கால் (16176), மதுரை (22624), முத்துநகர் (12694), குருவாயூர் (16128), மதுரை தேஜஸ் ஆகிய விரைவு ரயில்களும் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

எனினும், பயணிகளின் வசதிக்காக மேற்கண்ட அனைத்து விரைவு ரயில்களும் ஆக. 15, 16, 17 தேதிகளில் செங்கல்பட்டில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

You may also like

© RajTamil Network – 2024