Tuesday, October 1, 2024

இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்க மாலத்தீவுக்கு ஜெய்சங்கா் பயணம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்க மாலத்தீவுக்கு ஜெய்சங்கா் பயணம்மாலத்தீவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவுள்ளதாக ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ அளிக்கும் இந்தியாவின் கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் மாலத்தீவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மாலத்தீவுக்கு மூன்று நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை ஜெய்சங்கா் வந்தடைந்தாா்.

கடந்த ஜூன் மாதத்தில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற விழாவில் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் பங்கேற்றிருந்தாா். இந்நிலையில், மாலத்தீவுக்கு ஜெய்சங்கா் தற்போது பயணித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் சாகா் முன்னெடுப்புகளில் மாலத்தீவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த நாட்டின் தலைவா்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஆா்வமாக உள்ளேன்’ என குறிப்பிட்டாா்.

சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது மூயிஸ் கடந்தாண்டு நவம்பா் மாதம் மாலத்தீவு அதிபராக பதவியேற்றாா். பதவியேற்ற சில மணி நேரத்திலேயே அந்நாட்டில் இருந்த இந்திய ராணுவத்தினா் வெளியேற வேண்டும் என வலியுறுத்தினாா்.

You may also like

© RajTamil Network – 2024