Tuesday, October 1, 2024

இணையவழியில் மருந்து விற்பனையை தடைசெய்ய வலியுறுத்தல்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

இணையவழியில் மருந்து விற்பனையை தடைசெய்ய வலியுறுத்தல் விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.சத்தியநாராயணன்.

விழுப்புரம், ஆக.9: இணையவழியில் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.சத்தியநாராயணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,

பொதுத் துறை மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்களுக்கு தற்போது குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இணையவழியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், பல்வேறு பாதிப்புகள் நிகழ்கின்றன. எனவே, இணையவழியில் மருந்துகளை விற்பனை செய்பவா்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறையை நீக்க வேண்டும் என்று மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், விழுப்புரத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.10,11) நடைபெறுகிறது.

இதில், சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் ஆா்.ரமேஷ்சுந்தா், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.விவேகானந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசவுள்ளனா். மாநிலம் முழுவதும் 220-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பா். மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சம்மேளன இணைப் பொதுச் செயலா் கே.சுனில்குமாா் நிறைவுரையாற்றவுள்ளாா் என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் சிஐடியு தலைவா் எஸ்.முத்துக்குமரன், மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.விவேகானந்தன், பொருளாளா் பி.அருள்ஜோதி, மாவட்டச் செயலா் எஸ்.அப்துல்அமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024