Friday, September 20, 2024

திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத கல்வெட்டால் சர்ச்சை

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதற்காக, தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி தவிர சமஸ்கிருதத்திலும் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, விமான நிலையங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் திருச்சி விமான நிலையத்தில், மத்திய அரசின் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது தற்போது விவாத பொருளாகி இருக்கிறது. இந்தியை போலவே சமஸ்கிருதத்திற்கும் தேவ நாகரி என்ற எழுத்து வடிவம்தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்
அதற்காக, தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி தவிர சமஸ்கிருதத்திலும் ஒரு கல்வெட்டு… pic.twitter.com/lkxUEFU8bY

— Thanthi TV (@ThanthiTV) August 10, 2024

You may also like

© RajTamil Network – 2024