Saturday, September 28, 2024

ஜெகதீப் தன்கர் – ஜெயா பச்சன் இடையே வார்த்தை போர்!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

உங்கள் தொனி சரியாக இல்லை…. நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்.. ஜெகதீப் தன்கர் – ஜெயா பச்சன் இடையே வார்த்தை போர்!ஜெகதீப் தன்கர் - ஜெயா பச்சன் இடையே வார்த்தை போர்

ஜெகதீப் தன்கர் – ஜெயா பச்சன் இடையே வார்த்தை போர்

மாநிலங்களவையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கும், சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சனுக்கும் இடையே நடந்த வார்த்தை போர் பரபரப்பாக நடந்தது.

ஜூலை 31ஆம் தேதி அவையில் பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரி சமஸ்கிருதத்தில் பேசியபோது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை விமர்சித்ததாக காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், தான் இருவரையும் அழைத்து விவாதித்ததாகவும், அவர் சமஸ்கிருதத்தில் புகழ்ந்து பேசியதாகவும் கூறினார். இதனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து, அவைத்தலைவர் ஒரு சார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர். அப்போது பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, முன்பு ஒருமுறை காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரத்துக்கு பதிலளித்த போது அவைத் தலைவரின் தொனியில் வேறுபாடு இருந்ததை சுட்டிக்காட்டினார்.

விளம்பரம்

இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் தொனி சரியில்லை என்று ஜெயா பச்சன் குற்றம் சாட்டினார். பிரபலமாக இருந்தாலும் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். என அதற்கு அவைத்தலைவர் பதிலளித்துள்ளார்.

அவையில் சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சன் பேசுகையில், “நான் ஒரு கலைஞன். எனக்கு உடல் மொழி மற்றும் வெளிப்பாடுகள் புரியும். ஆனால் உங்கள் (அவைத்தலைவர்) தொனி சரியாக இல்லை. நாங்கள் சக ஊழியர்கள், ஆனால் உங்கள் தொனி ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று பேசினார்.

இதையும் படிங்க : அவைத்தலைவருடன் வார்த்தை போர்… எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு… இரு அவைகளும் ஒத்திவைப்பு!

விளம்பரம்

அப்போது குறிக்கிட்ட மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், “ஜெயா ஜி, நீங்கள் ஒரு பெரிய நற்பெயரை சம்பாதித்திருக்கிறீர்கள். ஒரு நடிகர் இயக்குனருக்கு கட்டுப்பட்டவர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் ஒவ்வொரு நாளும் நான் திரும்ப திரும்ப சொல்ல விரும்பவில்லை. நீங்கள் என் தொனியை பற்றி பேசுகிறீர்களா? இதோடு போதும். நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம். ஆனால் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்.” என்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு பேச அவைத்தலைவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவைத்தலைவரை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் ஒரு நான் முன்னதாகவே மாநிலங்களவை தொடர் முடித்து வைக்கப்பட்டது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament

You may also like

© RajTamil Network – 2024