பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், ஆக்கி போட்டியில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது.தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் இந்திய ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024