பிரதமர் கிசான் யோஜனாவின் 18வது தவணை கிடைக்க இதை செய்யுங்க…

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பிரதமர் கிசான் யோஜனாவின் 18வது தவணை கிடைக்க இதை செய்யுங்கள்… இல்லாவிட்டால் சிக்கல்தான்!பிஎம் கிசான் திட்டம்

பிஎம் கிசான் திட்டம்

சிறு, குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால், மொத்தமாக செலுத்தப்படாமல், 4 மாதங்களுக்கு ரூ.2,000 வீதம் 3 தவணையாக கிசான் யோஜனா நிதி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்து, தொடர்ந்து பலன்களை பெற வேண்டும் என்றால், உங்கள் செல்போன் எண்ணை புதுப்பிப்பதோடு, e-KYC சரிபார்க்கப்பட வேண்டும்.

இதற்கு முதலில் உங்களது போனில் PM Kisan App பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். அதை நிறுவிய பிறகு முதலில் ஆதார் எண் மற்றும் பயனாளியின் ஐடி ஆகியவற்றை உள்ளிட்டு உள்நுழையவும். அப்போது, உங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி-யை உள்ளிடவும். இதற்கு பிறகு, முக அங்கீகார விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் கேஒய்சி நிரப்பி, பதிவிடவும். இதைத் தவிர pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இதை செய்யலாம்.

விளம்பரம்

இதையும் படிங்க:
அலெர்ட்! ஐடி ரிட்டர்ன் தொகை வங்கிக் கணக்கிற்கு வந்துவிட்டதா? அரங்கேறும் புதிய மோசடி!

முதலில் இணையதளத்திற்குள் சென்ற பின்னர், முகப்புப் பக்கத்தில் உங்களது செல்போன் எண்ணை புதுப்பிக்க வேண்டும். அங்கு ஆதார் எண், பதிவு எண் மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன்பிறகு தோன்றும் திரையில் செல்போன் போன் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும். இதன்பிறகு திருத்து என்ற விருப்பத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

உங்களது புதிய செல்போன் எண்ணை உள்ளிடுவதன் மூலம் புதுப்பிக்கலாம். பழைய செல்போன் எண்ணை தொடர்வதாக இருந்தால் இதை செய்ய வேண்டியதில்லை. ஆனால், e-KYC கட்டாயம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இத்திட்டம் தொடர்பாக வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் 14599 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது helpdesk.csc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அனுப்பலாம்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Agriculture
,
Delta Farmers
,
farmers
,
government
,
Kisan Yojana
,
PM Kisan
,
Prime minister

You may also like

© RajTamil Network – 2024