செல்போனில் பேசப்பட்ட முதல் கால்… பில் எவ்வளவு தெரியுமா?

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் செல்போனில் பேச ஒரு நிமிட கட்டணம் எவ்வளவு தெரியுமா?டெலிகாம்

டெலிகாம்

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன்பாக நோக்கியா செல்போனில் முதல் அழைப்பு பேசப்பட்டது. இதுதான் பின்னாளில், மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்தியாவில் தற்போது செல்போன் டெலிகாம் தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு வீட்டுக்கு ஒரு லேண்ட் லைன் இருந்த காலங்கள் முடிந்து, ஆளுக்கொரு செல்போன்களை குடும்ப உறுப்பினர்கள் வைத்துள்ளனர்.

முன்பெல்லாம் இன்கமிங், அவுட் கோயிங் என இரண்டுக்கும் பில் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அவுட் கோயிங் மட்டுமே பில் வசூலிக்கப்படுகிறது. அதுவும் விருப்பம்போல அன் லிமிட்டாக பேசிக் கொள்ளலாம்.

விளம்பரம்

ஆனால் இந்தியாவில் முதன் முதலாக செல்போன் அழைப்பு 29 ஆண்டுகளுக்கு முன்பாக பேசப்பட்டபோது அதன் டாரிஃப் மிக அதிகமாக இருந்தது.

1995 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இந்திய டெலி கம்யூனிகேஷன் வரலாற்றில் முக்கியமான நாளாகும். அன்றுதான் முதல் செல் போன் அழைப்பை நோக்கியா போனை பயன்படுத்தி அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, அன்றைய மத்திய தகவல் அமைச்சர் சுக்ராமிற்கு பேசினார்.

அன்றைய சூழலில் மோடி – டெல்ஸ்ட்ரா நெட்வொர்க் என்ற நிறுவனம்தான் செல்போன் கம்யுனிகேஷனை நடத்தி வந்தது. இந்தியாவின் பி.கே. மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனங்களின் கூட்டு அமைப்பாக இந்த மோடி டெல்ஸ்ட்ரா செயல்பட்டது.

இதையும் படிங்க – பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம் – வினோதம் நடந்தது எப்படி?

முதல் நெட்வொர்க் கொல்கத்தாவையும், டெல்லியையும் இணைத்தன. அந்த நேரத்தில் அவுட் கோயிங் மற்றும் அவுட் கோயிங் கால் நிமிடத்திற்கு ரூ. 8.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பீக் ஹவரில் நிமிடத்திற்கு ரூ. 16.80 ஆக வசூலிக்கப்பட்டது. பண மதிப்பு சற்று அதிகம் இருந்த அந்த கால கட்டத்தில், இந்த செல்போன் பில் மிக செலவு மிக்கதாக பார்க்கப்பட்டது.

விளம்பரம்

அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக செல்போன் டெலிகாம் வளர்ச்சியடைந்து, இன்றைக்கு 4ஜி, 5ஜி, ஒன் இயர் ப்ளான்கள், அனைத்து ப்ளான்களுக்கும் அன்லிமிட்டெட் கால் வசதி என மாற்றங்கள் நடந்துள்ளன.

இதையும் படிங்க – டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் – அமித் ஷாவிடம் முக்கிய ஆலோசனை?

2016 ஆம் ஆண்டில் ஜியோ வந்தபிறகு இந்திய செல்போன் தொழில்நுட்ப துறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. 1995 ஆம் ஆண்டு நடந்த முதல் செல்போன் அழைப்பு மற்றும் இன்றைய சூழலை ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள என்பதை உணர முடியும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Mobile phone
,
Telecom
,
Telecommunications

You may also like

© RajTamil Network – 2024