16
புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கியின் வாரிய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது;
"வங்கிகளில் டெபாசிட் செய்வது மற்றும் கடன் வழங்குவது என்பது ஒரு வண்டியின் இரு சக்கரங்களை போன்றது. தற்போது வங்கிகளில் டெபாசிட் வைப்பது குறைந்து வருகிறது. வங்கிகள், டெபாசிட்களை திரட்டி, நிதி தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்கும் முக்கிய வங்கி வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
டெபாசிட் தொகைக்கும், கடன் வழங்குதலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை போக்க வேண்டும். மக்களிடம் இருந்து நிதி திரட்ட புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான வைப்புத் திட்டங்களை வங்கிகள் கொண்டுவர வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.