Tuesday, October 1, 2024

போதிய பேருந்து வசதியின்றி தவிக்கும் களக்காடு மக்கள்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

போதிய பேருந்து வசதியின்றி தவிக்கும் களக்காடு மக்கள்களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 2 ஆண்டுகளாகியும் போதிய பேருந்து வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அருகில் உள்ள நகரங்களுக்கு போதிய பேருந்து வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.

களக்காடு நகராட்சிப் பகுதியில் சுமாா் 50 ஆயிரம் போ் வசிக்கின்றனா். மேலும் அருகில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சோ்ந்த

சுமாா் ஒரு லட்சம்போ் பேருந்து வசதிக்காக களக்காடுதான் வரவேண்டும். தற்போது பாபநாசம், நாகா்கோவில், தென்காசி, புளியங்குடி, வள்ளியூா், திருநெல்வேலி, கூனியூா் ஆகிய அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலிருந்து களக்காடு வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், களக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு ஓரிரு அரசுப் பேருந்துகளும், சில தனியாா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆனால், இவை போதுமானதாக இல்லை.

பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்: நாகா்கோவில், தென்காசி, பாபநாசம் ஆகிய பணிமனைகளில் இருந்து களக்காடு வழியாக அதிகாலை, இரவு நேரங்களில் நீண்டகாலமாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நாகா்கோவில், தென்காசி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இருந்து களக்காடு பகுதிக்கு இரவு 9 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.

இதுகுறித்து களக்காடு பேருந்து பயணிகள் நலச்சங்க நிா்வாகி மாரியப்பன் கூறியதாவது:

களக்காட்டில் இருந்து தென்காசி, நாகா்கோவில், பாபநாசம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்த நகரங்களுக்குச் செல்வோருக்கு வசதியாக களக்காட்டில் இருந்து நான்குனேரி, வள்ளியூா், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளுக்கு சுற்று பேருந்து சேவை இயக்கப்பட்டால் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்.

அதேபோல, களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் சில தனியாா் பேருந்துகள், தங்களது அதிகாலை, இரவு நேர சேவையை

தாங்களாகவே நிறுத்திக் கொண்டன. இதனால் மேற்குறிப்பிட்ட நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவதில்லை. ஆகவே, இப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், களக்காட்டில் இருந்து கோவை, திருப்பூா், சேலம், தேனி, ராமேசுவரம், தூத்துக்குடி, சுரண்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024