Saturday, September 21, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு: 11 பேருக்கு மீண்டும் சம்மன்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு: 11 பேருக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் விசாரணை ஆணையம், 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம், மாடூர், மாதவேச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். 161 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. ஜூலை 7-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டுள்ள ஆணையத் தலைவர் கோகுல்தாஸ், 161 பேரிடம் தொடர் விசாரணை நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, இந்த விசாரணைக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, இதுவரை ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஒரு நபர் ஆணையத் தலைவர் கோகுல்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பிரபல சாராய வியாபாரிகள் உட்பட 24 பேரை கைது செய்துள்ள நிலையில், 11 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024