Tuesday, October 1, 2024

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை: இன்று மாலை நடை திறப்பு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். நாளை அதிகாலை 5.45க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்படும்.

இந்த நெற்கதிர்கள் பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

You may also like

© RajTamil Network – 2024