இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 11 வங்கதேசத்தினர் கைது!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 11 வங்கதேசத்தினர் கைது!இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக. 11) கைது செய்தனர்.

வங்கதேசத்தில் வன்முறை நிகழ்ந்து வருவதால், அங்கிருந்து தப்பி இந்தியாவின் மேற்கு வங்கம், திரிபுரா, மேகலயா எல்லைப்பகுதிகளுக்குள் நுழைய முயன்றவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, தலைநகர் டாக்காவிலிருந்து தப்பி இந்தியா வழியாக லண்டன் செல்லவுள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கும் அவர், லண்டன் விசா நடைமுறைகளுக்கு ஒப்புதல் கிடைத்ததும் லண்டன் செல்வார் எனக் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் தலைமைப் பொறுப்பேற்றார்.

கடந்த வியாழக்கிழமை (ஆக. 8) அவர் பதவியேற்றார்.

வங்கதேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் ஓயாமல் நீடித்து வருகிறது. இதனால் அநாட்டில் உள்ள மக்கள் தஞ்சம் அடைவதற்காக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்ல சிலர் முயற்சித்து வருகின்றனர். எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா, மேகலயா எல்லைப்பகுதிகளுக்குள் நுழைய முயன்ற 11 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் தீவிரமாக இருந்ததாலும் கலவரம் பெரிதானதாலும், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளிநாடுக்குத் தப்பினார்.

You may also like

© RajTamil Network – 2024