அனைத்து காலநிலைகளையும் தாக்குப்பிடிக்கும் புதிய பயிர்கள் அறிமுகம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

அனைத்து காலநிலைகளையும் தாக்குப்பிடிக்கும் புதிய பயிர்கள் – பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்!பிரதமர் மோடி

பிரதமர் மோடி

டெல்லியில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதிக மகசூல் தரும் 109 ரக உணவு தானியங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்தார்.

டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அனைத்து வகையான காலநிலைகளையும் தாக்குப்பிடிக்கும் பயிர் வகைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 61 உணவு தானியங்களில் 109 ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டன. பின்னர் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

புதிதாக அறிமுகமானதில் 34 வகை பயிர்கள், பெரிய விளை நிலங்களில் பயிர் செய்யும் வகையிலும், 27 பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுமாக வகை படுத்தப்பட்டுள்ளன. சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகளும் இதில் அடங்கும். தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கனிகள், கிழங்குகள், பூக்கள் மற்றும் மருந்துச் செடிகளையும் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

விளம்பரம்

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi interacts with the farmers and scientists as he releases 109 high-yielding, climate-resilient and biofortified varieties of crops at India Agricultural Research Institute. pic.twitter.com/mZiIgWfOx8

— ANI (@ANI) August 11, 2024

விளம்பரம்

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீடித்த வேளாண்மை மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை பிரதமர் மோடி எப்போதும் ஊக்குவித்து வருகிறார்.

இதையும் படிங்க: கர்நாடகாவின் துங்கபத்ரா அணையின் மதகில் உடைப்பு… எச்சரிக்கை விடுத்த ஆந்திர மாநில அரசு!விளம்பரம்

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க மதிய உணவு, அங்கன்வாடி போன்ற பல அரசு திட்டங்களுடன் உயிரி செறிவூட்டப்பட்ட பயிர் வகைகளை இணைப்பதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Agriculture
,
PM Modi

You may also like

© RajTamil Network – 2024