Saturday, September 21, 2024

அரசியலுக்கு வரும் ஆசை இருக்கா? – கீர்த்தி சுரேஷின் சுவாரஸ்ய பதில்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

'ரகு தாத்தா' படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் மதுரை சென்றிருந்தார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர், 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் 'பேபி ஜான்' மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது 'ரகு தாத்தா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, தற்போது படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் மதுரை சென்றிருக்கிறார். அப்போது, அவர் கூறுகையில், ' ரகுதாத்தா' இந்தி திணிப்பு தொடர்பான படம். தமிழ் நாட்டில் மட்டும்தான் இது போன்ற படங்களை பற்றிப் பேச முடியும். இந்திக்கு எதிராக பேசிவிட்டு இந்தியில் நடிப்பதாக பல கருத்துகள் வந்தன. இந்தி மொழியை நான் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பு கூடாது என்பதுதான் என் கருத்து, என்றார்

பின்னர் செய்தியாளர் ஒருவர், விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவருடன் நட்புடன் இருக்கும் நீங்கள் நட்பு அடிப்படையில் அவரது கட்சியில் ஏதேனும் பொறுப்பில் வர வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு கீர்த்தி சுரேஷ், அரசியலுக்கு வரும் ஆசை இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் வரலாம் வராமலும் போகலாம், என்றார்

அரசியல் வருகை குறித்த கேள்வி.. Hint கொடுத்த கீர்த்தி சுரேஷ்#keerthysuresh#raguthatha#thanthitvpic.twitter.com/KqfRCFEVWH

— Thanthi TV (@ThanthiTV) August 11, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024