ஆடி திருவிழா: கடலூர் சோலை வாழியம்மனுக்கு பால் குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

அய்யனார் மற்றும் சோலை வாழியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் சாலையில் பிரசித்தி பெற்ற சோலை வாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, கடந்த 9 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராஜயோக அய்யனார் கோவிலில் அய்யனாருக்கு சிறப்பு யாகம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அய்யனார் மற்றும் சோலை வாழியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அந்த பாலைக் கொண்டு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024