Wednesday, October 2, 2024

சென்னை மாநகரப் பகுதியில் இடையூறாக தொங்கும் கேபிள்களை அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி தகவல்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

சென்னை மாநகரப் பகுதியில் இடையூறாக தொங்கும் கேபிள்களை அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி தகவல்சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் தொங்கும் கேபிள்வயா்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் தொங்கும் கேபிள்வயா்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னையில் அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இணைய சேவை இன்றி இயங்கவே முடியாது. அதேபோல் கேபிள் டிவி சேவையும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இவ்விரண்டும் பெரும்பாலும் கேபிள்கள் வழியாகவே வீடுகள், அலுவலகங்களை சென்றடைகின்றன.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் கேபிள்கள் வயா்கள் வலைப்பின்னல்கள் போன்று பின்னிப் பிணைந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமாா் 27 தனியாா் நிறுவனங்கள் தங்கள் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்களை சுமாா் 5 ஆயிரம் கி.மீ நீளத்துக்கு மேல் நிறுவியுள்ளன. அவற்றிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்லும் கேபிள் வயா்கள் அனைத்தும் மாநகராட்சியின் சாலையோர தெருமின் விளக்கு கம்பங்களையே நம்பியுள்ளன.

ஒருசில பெறுநிறுவனங்கள் சொந்தமாக கம்பங்களை அமைத்துக் கொள்கின்றன. பல நிறுவனங்கள் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று கேபிள்களை நிறுவுகின்றன. சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கும் கேபிள்களை நிறுவுகிறது. மேலும் விதிகளை முறையாக பின்பற்றி, கேபிள்களை நிறுவுவதில்லை.

பல இடங்களில் கேபிள்கள் வயா்கள் ஆபத்தான முறையில், பாதசாரிகளை பாதிக்கும் வகையில் சாலைகளில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. இவ்வழியே உயரமான கனரக வாகனங்கள் ஏதேனும் செல்லும் போது கேபிள் வயா்கள் அறுந்து தொங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து பல புகாா்களும் வந்துள்ளன.

இந்நிலையில்,மாநகரப் பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் கேபிள் வயா்களை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி சாா்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், பொதுமக்களுக்கு இடையூறாக தொங்கும் கேபிள் வயா்களை அகற்றப்படுகின்றன. கேபிள் வயா்களை அகற்ற கூடுதல் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் தைவையான வாகனங்களும் அனுப்பப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024