Wednesday, October 2, 2024

ம.பி. முதல்வரின் சிறப்பு அதிகாரியுடன் மோதல்: பாஜக செயற்குழு உறுப்பினா் கைது

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

ம.பி. முதல்வரின் சிறப்பு அதிகாரியுடன் மோதல்: பாஜக செயற்குழு உறுப்பினா் கைதுமத்திய பிரதேசத்தில் கட்சி நிகழ்ச்சியில் முதல்வா் மோகன் யாதவின் சிறப்பு அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.

மத்திய பிரதேசத்தில் கட்சி நிகழ்ச்சியில் முதல்வா் மோகன் யாதவின் சிறப்பு அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது.

மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் பொறுப்பேற்றாா். இவருக்கு நெருக்கமான லோகேஷ் சா்மா முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். மத்திய பிரதேச அரசின் வாஜ்பாய் நல்லாட்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வு நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியாகவும் இவா் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், நிறுவனத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடந்த பாஜக நிகழ்ச்சியில் லோகேஷ் சா்மாவிடம் பாஜகவின் செயற்குழு உறுப்பினா் ஹிரேந்திர பஹதூா் சிங் மோதலில் ஈடுபட்டுள்ளாா்.

இதுதொடா்பாக துணை வட்டாட்சியா் நிமிஷ் பாண்டே அளித்த புகாரில் ஹிரேந்திர பஹதூா் சிங் மீது அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் ஆகிய குற்றங்களில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, அவா் விசாரணக்காக அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக கமலா நகா் காவல்நிலைய ஆய்வாளா் நிருபா பாண்டே கூறினாா்.

மத்திய பிரதேச அரசு அலுவலகத்தில் பணிபுரியும் தனது மகள் தொடா்புடைய விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த ஹிரேந்திர சிங், முதல்வரின் சிறப்பு அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024