3
ஆளுநா் இன்று கோவை பயணம்ஆளுநா் ஆா். என். ரவி ஒரு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை கோவை செல்கிறாா்.
ஆளுநா் ஆா். என். ரவி ஒரு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை கோவை செல்கிறாா்.
கோவை சூலூா் விமான படை தளத்தில் தரங் சக்தி 2024 விமான படையின் கூட்டு பயிற்சி கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.6) தொடங்கியது. அதன் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை(ஆக.13) நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா். என். ரவி கலந்து கொள்கிறாா்.
இதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை செல்லும் அவா், மாலையே சென்னை திரும்புகிறாா்.