Wednesday, October 2, 2024

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு : சென்னை ஐஐடி முதலிடம்!ஐஐடி சென்னை

ஐஐடி சென்னை

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதுபோல் மாநில பல்கலைக்கழங்களின் வரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்து தலைநிமிர்ந்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் தேசியத் தரவரிசை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் விவரங்கள் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான விழாவில் வெளியிடப்பட்டன.

விளம்பரம்

அதில், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் பட்டியில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது. இதற்கான விருதை, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெற்றுக் கொண்டார். இதேபோல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலிலும், சென்னை ஐஐடி இரண்டாம் இடம் பிடித்தது. புதுமையான கண்டுப்பிடிப்புகள் பிரிவிலும் சென்னை ஐஐடி 2 ஆம் இடம் பிடித்தது.

மாநில அரசின் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. உயர் கல்வியில், சிறந்து விளங்கும் நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில அரசின் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

விளம்பரம்

அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களின் பட்டியலில் , கோவை அமிர்தா விஷ்வா வித்யாபீடம் 7 ஆவது இடத்தையும், வேலூர் வி.ஐ.டி. 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7 ஆவது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

பொறியியல் படிப்புகளை பொறுத்தவரையில், அகில இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு பிரிவு வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் பொறியியல் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. திருச்சியில் உள்ள மற்றொரு மத்திய அரசு நிறுவனமான என்.ஐ.டி. 9 ஆவது இடம் பிடித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க யூடியூபர் எடுத்த வீடியோ… விசாரணையில் திடீர் அந்த பல்ட்டி… நடந்தது என்ன?

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் வேலூர் (சிஎம்சி) கிறிஸ்தவ கல்லூரி 3வது இடத்தையும், புதுச்சேரி ஜிம்பர் 5வது இடத்தையும் பிடித்துள்ளன. பல் மருத்துவத்தில் சென்னை சவீதா நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anna University
,
IIT Madras

You may also like

© RajTamil Network – 2024