Wednesday, October 2, 2024

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கினார் முதல்வர்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கினார் முதல்வர்!தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.

தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.

சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர நாள் கொண்டாட்ட விழா மேடையில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனுக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய, தகைசால் தமிழா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக சந்திரயான் – 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டா் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிா் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வா் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

சுதந்திர நாளில் மாநில முதல்வர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுக்கொடுத்தவர் தலைவர் கருணாநிதிதான். இதுவும் ஒரு விடுதலை போராட்டம்தான். மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பதற்காக போராட்டம். அவர் பெற்றுத்தந்த உரிமையின்படியே 4 ஆவது ஆண்டாக நானும் தேசியக்கொடி ஏற்றியுள்ளேன். அதற்காக பெருமை அடைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024