இலங்கை அதிபர் தேர்தல்: 38 வேட்பாளர்கள் போட்டி?

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது.

கொழும்பு,

இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் அடுத்த மாதம் 21ம் தேதி நடக்கிறது. இலங்கையில் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே உள்ளார். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இதேபோல், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, நீதித்துறை மந்திரியாக உள்ள விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமரா திசநாயகே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது. அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று வரை அதிபர் தேர்தலில் போட்டியிட 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 20 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 18 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். அனைவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டால், இதுவரை நடந்த அதிபர் தேர்தலிலேயே, அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது அமையும்.

You may also like

© RajTamil Network – 2024